சினிமா

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை! நிறுத்திகோங்க! இளைஞர்களின் மனதை சுக்குநூறாக்கிய பிரபல இளம்நடிகை!

Summary:

Actress amirtha iyar not participate in bigboss season 4

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நான்காவது சீசன் ப்ரோமோ வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் அதில் நடிகைகள் சுனைனா, ரம்யா பாண்டியன் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை அவர்கள் மறுத்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி, ரியோ, ஷாலு ஷம்மு மற்றும் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அமிர்தா ஐயர் ஆகியோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் அதற்கு அமிர்தா ஐயர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நன்றி என்று கூறியுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


Advertisement