ஒரே ஜாலி தான்... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உள்ள வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கவர்ச்சி, நடனம் இவற்றை தாண்டி, நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தனுஷ் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சிவகார்த்திகேயனின் நம்ப வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது குழந்தைகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பயங்கர சந்தோசமாக உள்ள வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.