ஐயோ..! எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..! அதிரடியாக அறிவித்த நடிகர் யோகிபாபு..! என்ன விஷயம் தெரியுமா.?Actor Yogi Babu refused about Thwlath movie poster

தெளலத் என பெயரிடப்பட்ட படத்தின் புகைப்படம் ஒன்று நடிகர் யோகி பாபுவின் புகைப்படத்துடன் வெளியான நிலையில் இந்த படத்திற்கும், தனக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நடிகர் யோகிபாபு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. நகைச்சுவை காதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் யோகிபாபு. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர்.

Yogi babu

இப்படி நடிகர் யோகிபாபுவின் புகழை கருத்தில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுஒருபுரம் இருக்க, சமீபத்தில் "தெளலத்" என பெயரிடப்பட்ட படத்தின் விளம்பரம் ஒன்று நடிகர் யோகிபாபவின் புகைப்படத்துடன் வெளியானது.

Yogi babu

மிக விரைவில் வெளியாக இருப்பதாக அந்த படத்தின் போஸ்டரில் குறிப்பிட்டிருந்தநிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் யோகி பாபு. "இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.