சினிமா

உங்கள இப்படி பார்க்க புதுசா இருக்கு.. யாஷிகாவின் புது கெட்டப்.. வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் புதிய படத்தின் அவரது நியூ லுக் போஸ்டர்  ஒன்று இணையத்தளத்தில்

நடிகை யாஷிகா ஆனந்த்தின் புதிய படத்தின் அவரது நியூ லுக் போஸ்டர்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைதொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக  இருந்த அவர், தற்போது சல்பர் என்ற புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தின் போஸ்டரை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சல்பர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என உள்ளது. இதோ அந்த போஸ்டர்..

 


Advertisement