அடுத்தடுத்த இழப்புகள்.! பிரபல காமெடி நடிகர் காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!

அடுத்தடுத்த இழப்புகள்.! பிரபல காமெடி நடிகர் காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!


actor-visweshwara-rao-passed-away

திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் திடீரென உயிரிழப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி 48 வயது நிறைந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில் இன்று தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உயிரிழந்துள்ளார்.

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு விளங்கினார்.

Visweshwara rao

இந்நிலையில் 62 வயது நிறைந்த அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை சிறுசேரியில் உள்ள அவருடைய வீட்டில்  வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.