இவர்தான் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

இவர்தான் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!


actor-vishnu-vishal-father-promoted-as-dgp

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய பிரபலமாகிவிட்டார் விஷ்ணு விஷால்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராட்சசன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அமலாபாலுடன் சேர்த்து கிசுகிசுக்கள் எழுந்தது. பின்னர் அது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்.

vishnu vishal

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தந்தையை வாழ்த்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு காரணம் போலீஸ் அதிகாரியாக இருந்த அவரது தனது பதவி உயர்வு பெற்று DGP ஆகிவிட்டாராம். இதோ அந்த புகைப்படம்.