தமிழகம் சினிமா Covid-19

"பயமின்மையே சிறந்த மருந்து.." கொரோனா அனுபவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்!

Summary:

Actor vishal shares corono experience

தனது தந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் தனக்கும் தனது மேலாளருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர், அவரது தந்தை மற்றும் மேலாளர் மூவரும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டது பற்றி தனது அனுபவத்தை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார் நடிகர் விஷால்.

அந்த வீடியோவில் முதலில் அவரது தந்தைக்கு கொரோனா உறுதியானது என்றும் பின்னர் அவருக்கும் அவரது மேலாளருக்கும் அறிகுறிகள் இருந்தன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மூவரும் ஆயுர்வேதிக் மருந்தினை சாப்பிட்டு தற்போது குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பயமின்றி இருப்பதே அதனை எதிர்கொள்ள சரியான மருந்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஒரு விளம்பரமாக இல்லாமல் அனைவரும் பயன்பெற வேண்டுமென்றே தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement