திடீரென கைது செய்யப்பட்ட நடிகர் விஷால்!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.actor vishal arrested


சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். 

நேற்று சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு, தயாரிப்பாளரில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் விஷால் பூட்டை அகற்ற காவல்துறையில் அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நடிகர் விஷால். 

vishal

மேலும், சட்டவிரோதமாக போடப்பட்ட பூட்டை அகற்ற எங்களுக்கு பாதுகாப்பு தராமல்  இப்படி தடுக்கிறீர்களே என ஆவேசத்துடன் விஷால் பேசினார்.

 போலீசார் நடிகர் விஷாலிடம் இப்போது சம்பவ இடத்தை விட்டு நகருங்கள் என எச்சரித்தனர். ஆனால் விஷால் தரப்பு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இறுதியாக அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.