விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட நடிகர் , நடிகைகள்!!!

விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட நடிகர் , நடிகைகள்!!!


actor-vijay-sethupathi-in-trisha-super delux

'ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக் குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முக்கியமாக திரிஷா உள்ளிட்ட சில கதாநாயகிகளே விஜய் சேதுபதியின் தோற்றத்தை பகிர்ந்து இவரை பார்த்தால் எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த தோற்றம் பற்றி தியாகராஜன் குமரராஜா கூறும்போது ‘ஷில்பா கேரக்டரை எப்படி யோசித்து டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புகொண்டது பெரிய வி‌ஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர் ரொம்பவே மெனக்கெட்டார்’ என்று கூறியுள்ளார்.

படம் பற்றிம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறியவை, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற இயலாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் இந்த கதை.ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே உணர்த்தும்  திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.

இதில் ஒரு முக்கிய வேடத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்துவருகிறார். படத்தின் முக்கியமான ஒரு காட்சியை 88 ரீடேக் எடுக்கப்பட்டது. இந்த காட்சிக்காகவே நதியா படத்தில் இருந்து விலகினார். என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் என்று கூறியுள்ளார் .