சினிமா

போலீசிடம் இருந்து நடிகர் விஜய்யை காப்பாற்றிய காமெடி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

Summary:

Actor vijay friend talks about vijay

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் தளபதி. இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்க்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகள் படைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இதனை வெற்றியும் ஒரே நாளில் கிடைத்தது அல்ல. பல வெற்றிப்படங்கள், தோல்வி படங்கள் என அனைத்தையும் தாண்டித்தான் விஜய் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆரம்ப கால வாழ்க்கைப்பற்றி சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் அவரது நண்பர் ஸ்ரீநாத்.

விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த நேரம் ஓர் இரவு நானும் அவனும் RX100 பைக்கில் வேகமாக மவுண்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தோம். எங்களிடம் லைசென்ஸ், ஹெல்மெட் என எதுவுமே இல்லை. அப்போது டிராபிக் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நான் விஜயிடம் மச்சான் வண்டியை வேகமா ஒட்டு மச்சான், அழுத்து மச்சான்.... அழுத்து என்றேன். நான் சொன்னது ஆக்ஸிலரேட்டரை ஆனால் அவனோ வேகமாக வண்டியை ஒட்டி சென்று போலீஸிடம் நிறுத்தினான்.

நான் ஏண்டா போலிஷ்கிட்ட வந்தன்னு கேட்டதுக்கு நீந்தானடா அலுத்து மச்சானு சொன்ன என கேட்டான். பின்னர் நான்தான் சார்..சார்.. பையன் டைரக்டர் S.A.சந்திரசேகருடைய மகன் என சொல்லி காப்பாற்றி அழைத்து வந்தேன் என்றார்.


Advertisement