சினிமா

இதுவரை யாரும் பார்த்திராத இளையதளபதி விஜயின் சிறு வயது அரிய புகைப்படம் உள்ளே!

Summary:

actor vijay childhood photo unseen

இயக்குனர் சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய் தனது 10 வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தனது தந்தையின் இயக்கத்தில் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

actor vijay as child artist க்கான பட முடிவு

ஆரம்ப காலகட்டத்தில் காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜய். குறிப்பாக பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் ஒரு சில படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார் விஜய்.

பின்னர் திருமலை படம் துவங்கி ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கத் துவங்கினார். விஜய் அதனை தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, வேட்டைக்காரன், துப்பாக்கி, தலைவா, கத்தி, மெர்சல், சர்க்கார் என பல வெற்றி படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தற்போது இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அவரது பல்வேறு புகைப்படங்களை திடீரென ட்விட்டரில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். 


Advertisement