முகத்தில் சோர்வு.. மெலிந்துபோன உடல்.. வைரலாகும் நடிகர் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம்..



actor-vadivelu-latest-photos-goes-viral

உடல் இளைத்து, பார்பதற்க்கே சோர்வாக இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு ஒரு சமயத்தில் பயங்கர பிசியாக இருந்தார். அதன்பின்னர் ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினார்.

Latest tamil news

தற்போது அவரே நடிக்க வந்தாலும், புது முக நடிகர்களின் போட்டியால் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், சமீபத்தில் கூட வடிவேலு ஒருவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் வடிவேலு ஒரு பொது நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மனோபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வடிவேலு கொஞ்சம் உடல் எடை குறைந்து, சோர்வாக காணப்படுகிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Latest tamil news