திரைத்துறையினர் யாரும் வேண்டாம்! எளிமையான முறையில் நடந்த வைகைப்புயல் வடிவேலு மகள் திருமணம்!

திரைத்துறையினர் யாரும் வேண்டாம்! எளிமையான முறையில் நடந்த வைகைப்புயல் வடிவேலு மகள் திருமணம்!


actor-vadivel-marriage

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வடிவேலு. வடிவேலு, சினிமாவில் புகழின் உச்சத்துக்குச் சென்ற வேளையில், அரசியலில் தலையிட்டு சறுக்கல்களைச் சந்தித்தார்.தற்போது பழையபடி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில், வடிவேலுவின் சொந்த ஊரான மதுரையில், எந்தவித ஆடம்பர ஏற்பாடுகளும் விளம்பரமும் இன்றி, வடிவேலு தன் மகளுக்குத் திருமணம் நடத்தியுள்ளார். 

வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்தத் திருமணத்துக்கு திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரமாண்ட ஏற்பாடுகள் இல்லாமல் அமைதியாக நடந்தது. அதேபோன்று, தன் மகளின் திருமணத்தையும் எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் வடிவேலு. மதுரை ஐராவதநல்லூரில் உள்ள என்.எஸ்.சந்திர அம்மாள் திருமண மண்டபத்தில், வடிவேலுவின் இளைய மகளின் கலைவாணிக்கும் ராமலிங்கம் என்பவருக்கும் திருமணம், மிகவும் எளிமையான முறையில் ஆரவாரமின்றி  இன்று நடைபெற்றது. 
 
அரசியல், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், நகைச்சுவை நடிகர் பூச்சி முருகன் மட்டும் தென்படுகிறார். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ‘திருமணம் எளிமையான முறையில் நடக்கிறது, தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கூறி அனுப்பிவிட்டனராம்!