அவரோட வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுகிட்டே இருக்கிறேன்.. அம்மாவை இழந்து தவிக்கும் பிரபல நடிகர்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!actor-udhaya-share-about-his-mother-dead

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள நடிகர் உதயா, இயக்குநர் விஜய் ஆகியோரது  தாயாரும், மூத்த தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு  காலமானார். இந்த நிலையில் நடிகர் உதயா உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு வருத்தமடைய வைத்துள்ளது.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மூத்த மகன், இயக்குநர் விஜய்யின் அண்ணன் உதயா. அவர்  இனி எல்லாம் சுகமே, திருநெல்வேலி, கலகலப்பு, ஷக்கலக்க பேபி, தலைவா, மாநாடு உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு ஹிட்டான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இந்நிலையில் அவரது அம்மா வள்ளியம்மை சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் அம்மாவை இழந்து சோகத்தில் தவிக்கும் நடிகர் உதயா, தனது அம்மா குறித்து மிக உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

udhaya

அதில் அவர், அம்மா என்றாலே தெய்வத்திற்கு சமமானவர். ஆனால், எங்களுக்கு இன்னும் ஒருபடி மேல். விஜய், தங்கை, என்னை மூவரையும் ஒரேமாதிரி நடத்துவார். நான்  நடிக்க வேண்டும் கூறியபோது அவர்தான் அப்பாவை சம்மதிக்க வைத்து என்னை நடிகனாக்கினார். பொருளாதார ரீதியாக நான் அம்மாவுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் மிகவும் அதிகமாக பாசத்தையும் அன்பையும் கொடுத்தேன். உன்னை விட்டு செல்லமாட்டேன் என்றார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை. அவரது வாய்ஸ் மெசேஜ்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அம்மாவின் குரல் தனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.