சினிமா

மாரி 2 வில்லன் நடிகருக்கு ஷூட்டிங்கில் ஏற்பட்ட பலத்த காயம்.! படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்!

Summary:

மாரி 2 வில்லன் நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் டொவினோ தாமஸ். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். 

இந்நிலையில் டொவினோ தாமஸ் தற்போது கள என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வந்துள்ளது. மேலும் கடந்த இரு நாட்களாக பயங்கர  சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் படப்பிடிப்பிலேயே  சுருண்டு விழுந்துள்ளார்.

அதனை தொடர்ந்து உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொண்ட போது, வயிற்றுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement