நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!

நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!


actor-surya-guest-appearance-in-nandhini-serial

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அது தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

நாகினி என்ற பாம்பு சீரியல் ஒன்று பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து சன் டிவி நந்தினி என்ற பாம்பு சீரியலை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடரை அவினி சினி கிரியேஷன் என்ற பெயரில் சுந்தர் சி வழங்கி வருகிறார். இந்த தொடரில் நடிகையாக நடிக்கும் நித்யராம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

Nandhini serial

பொதுவாக ஒரு சீரியல் நன்றாக ஓடினாள் அந்த தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரபல நடிகர்களை கெஸ்ட் ரோலாக நடிக்க வைப்பது பாலிவுட்டில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

அந்த டிரெண்டு இப்போது தமிழ் சின்னத்திரைக்கும் தொற்றிக்கொண்டதோ என்னவோ, நந்தினி சீரியல் செட்டில் சூர்யா வந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நந்தினி சீரியல் நடிகர்களோடு அவர் எடுத்துகொண்ட ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

Nandhini serial
 
ஆனால் உண்மையில் சூர்யா அவர்களை சாதாரணமாக பார்க்க தான் சென்றாரா அல்லது சீரியலில் எதாவது கெஸ்ட் ரோலா என்பது தெரியவில்லை. காத்திருந்தே பார்க்க வேண்டும்.