கொரோனா சமயத்திலும் காவல்நிலையத்திற்கே நேரில் சென்று உதவி செய்த நடிகர் சூரி..! குவியும் வாழ்த்துக்கள்.!Actor soori helped TN cops photos goes viral

ஊரடங்கு அறிவித்ததில் இருந்து சிரமப்படும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியும், உதவி தொகை வழங்கியும் தனது பணியை சிறப்பாக செய்துவரும் நடிகர் சூரி இன்று காவலர்களை சந்தித்து உதவி பொருட்களை வழங்கியுள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் வரும் மே 17 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றுகாட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கில் பல தொழிலார்கள் வேலை இழந்து, ஒரே நேர சாப்பாட்டிற்க்கே சிரமப்படும் சூழல் உருவானது. இதுபோன்று சிரமப்படும் மக்களுக்கு அரசும், பிரபலங்களும், தன்னார்வலர்களும் உதவி செய்துவருகின்றனர்.

Soori

அந்த வகையில், நடிகர் சூரி இதுவரை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ள நிலையில், கொரோனாவை நேரடியாக எதிர்த்து போராடும் காவலர்களை இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்கினார்.

மேலும் காவலர்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் நடிகர் சூரி. சூரியின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Soori