சினிமா

இதையெல்லாம் சாப்பிடுவியா? சாப்பிடுவியா.? சீனா காரனுங்க வாயிலையே அடிங்க மோடி ஐயா..!

Summary:

Actor soori corono video

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் இதுவரை 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களை தங்கள் வீடுகளிலையே இருக்க வலியுறுத்தி அவ்வப்போது வீடியோ வெளியிட்டுவரும் நடிகர் சூரி தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மகனை குளிப்பாட்டிவிட்டுக்கொண்டே, அந்த கொரோனாவை எப்படியாவது வெளக்கமாத்தால் அடித்து விரட்டுங்கள் மோடி ஐயா என கோரிக்கை வைத்துள்ளார் சூரி.

மேலும், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருக்கும் அந்த சீனா காரனுங்களுக்கு போன் போட்டு, பாம்பு, வவ்வால் இதையெல்லாம் இனி சாப்பிடுவியா, சாப்பிடுவியா என வெளக்கமாத்தாளையே அவனுங்க வாயில அடிங்க மோடி ஐயா என வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி.


Advertisement