தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணையும் பிரபல கன்னட நடிகர்.! யார்னு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!actor-sivarajkumar-going-to-act-with-thanush-in-captain

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

Captain miller

மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷான், நிவேதா, சதீஷ்  உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.