அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
நடிகர் தனுஷை மறைமுகமாக குத்திக்காண்பித்த சிவகார்த்திகேயன்? - சமூக வலைத்தளங்களில் கலவரம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று, தொகுப்பாளராக பணியாற்றி, பின்னாளில் மெரினா, 3 உட்பட சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று, இன்று தவிர்க்க முடியாத தமிழ் நடிகர்களில் ஒருவராகியுள்ளவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது திரைப்படங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். அந்த வகையில், சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி என்ற திரைப்படத்தை தற்போது தயாரித்து வழங்கி இருக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
இதனை முன்னிட்டு இன்று படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "யாரையாவது கண்டுபிடித்து, நான்தான் இவருக்கு வாய்ப்பை கொடுத்து, வாழ்க்கை கொடுத்தேன், இவரை நானே தயார் செய்தேன் என நான் யாரையும் சொல்லமாட்டேன்.
இதையும் படிங்க: அமரன் படத்துக்காக உடலை செதுக்கிய சிவகார்த்திகேயன்; படக்குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ.!
என்னை அப்படியே சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். அதுபோன்ற நபர் நான் இல்லை" என கூறினார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு சர்ச்சையை சந்தித்து, அவர் யாரை கூறுகிறார்? அவரை உயர்த்திவிட்டு நடிகர் தனுஷை கூறுகிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கலாய், கேள்வி
பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறனும், இதுகுறித்த செய்தியை பகிர்ந்து தனுஷ் என பதிவிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை கூறி சமூக வலைத்தளத்தில் தனுஷ் ரசிகர்கள் வெர்சஸ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என்ற நிலையை உண்டாக்கி இருக்கின்றனர்.