சினிமா

4 மாத கர்ப்பம்! உயிரிழந்த காதல்கணவரை கடைசியாக கட்டியணைத்து கதறிய பிரபலநடிகை! கண்கலங்க வைக்கும் இறுதிச்சடங்கு வீடியோ!

Summary:

Actor siranjeevi sarja funeral photo viral

கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர்  சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மிகநெருங்கிய உறவினர் ஆவார். சிரஞ்சீவி சார்ஜா 4 வருடங்களாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்துவந்தார். பின்னர் அவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  ஹீரோவாக அறிமுகமானார்.

அதனைதொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி சார்ஜா பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை  மேக்னா ராஜை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் பல மலையாளம் மற்றும்  கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

 

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பசவங்குடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  பின்னர் அவருக்கு பிடித்தமான பண்ணைவீட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின்  இறுதி சடங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவரது கர்ப்பிணிமனைவி கணவரின் சடலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறும் புகைப்படங்கள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. 

 

 


Advertisement