சினிமா

10 வருட காதல்..! 2 வருட திருமண வாழ்க்கை..! 39 வயதில் மாரடைப்பால் இறந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

Summary:

Actor siranjeevi sarja family history

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் நடிகர் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் உறவினர். சுமார் நான்கு வருடங்கள் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்த சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2009-ம் ஆண்டு வெளியான     வாயுபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதனை அடுத்து இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி சார்ஜா. இந்நிலையில் திடீர் மூச்சு திணறலால் அவதிப்பட்ட இவர் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிரஞ்சீவி சார்ஜா 39 வயதில் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா பிரபல நடிகை  மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் பல்வேறு மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இருவரும் சுமார் 10 ஆண்டுகள் நண்பர்கள் மற்றும் காதலர்களாக இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், மே 2 ஆம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணம் முடிந்தும் இருவரும் நடிப்பு, சினிமா என கவனம் செலுத்திவந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement