"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பிரபல தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் பொதுமக்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவலர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
குறிப்பாகா சினிமா துறையில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், விஷால், இயக்குனர் ராஜமவுலி என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் நுரையீரல் பாதிப்பினால் உயிரிழந்தார்.
இப்படி திரைத்துறையினர் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும்நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.