தமிழகம் சினிமா

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தார்கள்!!

Summary:

தமிழ் திரையுலகில் காமெடியன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை

தமிழ் திரையுலகில் காமெடியன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் சின்னி  ஜெயந்த். பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் 80,90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஏறக்குறைய 150 படங்களில் நடித்து பிரபலமான அவர் 'உனக்காக மட்டும்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். பொதுவாகவே திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலரும் தங்களது வாரிசுகளை சினிமாவில் ஹீரோவாக்குவதை வழக்கமாக வைத்திருப்பர். ஆனால் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். 

சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி அடைந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது  தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக பதவியேற்றுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.  


Advertisement