தமிழகம் சினிமா

தனது அடுத்த படத்திற்காக புதிய கலையை வெளிநாட்டில் கற்கும் சிம்பு.!

Summary:

actor simpu new movie manadu - venket prabhu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு இன்று, தமிழ் சினிமாவின் ராஜாவாக வளர்ந்து நிற்கிறார். சிம்பு என்றாலே சர்ச்சை என்பது போல் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இப்படம் வெளிவந்து தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இயக்குனர், வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு என்ற படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக தற்காப்பு கலைகள் கற்க, சிம்பு தாய்லாந்து செல்ல உள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். 

பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். சமீபத்தில் சிம்பு பிறந்த நாளன்று பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை செய்து படப்பிடிப்பைத் தொடங்க சிம்பு கேட்டுக் கொண்டார். 

இந்தப் படம் அரசியல் திரில்லராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ‘பார்ட்டி’ படத்தின் வெளியீட்டிற்காக இயக்குநர் வெங்கட பிரபு காத்திருக்கிறார்.


Advertisement