என்னது நடிகர் சிம்புக்கு தடபுடலாக திருமணம் நடக்கவுள்ளதா... பெண் யார் தெரியுமா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!Actor simbu will marry srilanka girl

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். 

தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த சிம்புவின் பேரின் சில சர்ச்சையான செய்திகள் வெளியாகின. இதனால் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் விட்ட இடத்தை பிடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பத்து தல என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். 

cinema

இந்நிலையில் இத்தனை நாளாக திருமணம் வேண்டாம் என இருந்த சிம்பு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்புக்கு மருத்துவம் படித்திருக்கும் இலங்கையை சேர்ந்த பிரபல கோடீஸ்வர பெண்ணை தான் திருமணம் பேசி முடித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த செய்தி சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.