சிம்பு பிறக்கும்போதே இவ்வளோ சொத்து இருந்ததா? அப்போ இப்போ எவ்வளோ இருக்கும்?Actor simbu asset value when he was born

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும், சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் சிம்புவிற்கு வாடிக்கையான ஓன்று. தற்போது சுந்தர் சி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. படம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது படத்திற்கு பாலபிஷேகம் செய்யவேண்டாம், கட்டவுட் வைக்கவேண்டாம். அந்த படத்தில் உங்கள் அம்மா, அப்பாவுக்கு துணி வாங்கி கொடுங்கள் என தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார் நடிகர் சிம்பு.

simbu

உனக்கெல்லாம் எந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் என யாரோ சிம்புவை வெறுப்பேத்த, கொந்தளித்த அவர் மீண்டும் தனது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். எனது படத்திற்கு பெரிய அளவில் கட்டவுட் வையுங்கள் என்றும், பாக்கெட் பால் வேண்டாம், அண்டா, அண்டாவா பால் ஊத்துங்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சர்ச்சைகளுடன் சேர்ந்து வைரலானது.

simbu

இந்நிலையில் நடிகர் சிம்புவின் நண்பர் மகத் பேசுகையில், சிம்பு அந்த வீடியோவை தெரிந்தேதான் செய்தார். அதுமட்டுல்ல சிம்பு இனிமேல் பிரபலத்தை தேடிக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிறக்கும் போதே சிம்புக்கு 1000 கோடி சொத்து இருந்தது என்று கூறியுள்ளார்.

பிறக்கும்போது 1000 கோடினா அப்போ, இப்போ எவளோ சொத்து இருக்குமென்று ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.