சினிமா

66 வயசு ஆச்சு.. ஆனாலும் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! சரத்குமாரின் வைரல் புகைப்படம்

Summary:

66 வயதிலும் பார்ப்பதற்கு மிகவும் வாட்ட சாட்டமாக, கம்பீரமாக இருக்கும் நடிகர் சரத்துக்குமாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

66 வயதிலும் பார்ப்பதற்கு மிகவும் வாட்ட சாட்டமாக, கம்பீரமாக இருக்கும் நடிகர் சரத்துக்குமாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்று வரை மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். 90ஸ் ஹிட்ஸ்களின் மிகவும் பேவரைட்டான நடிகர்களில் இவரும் ஒருவர். சரத்குமார் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

உதாரணத்திற்க்கு நாட்டாமை, சூரியவம்சம் போன்ற படங்கள் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சினிமாவில் பிசியாக இருந்த இவர் தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை வழிநடத்திவருகிறார் சரத்குமார்.

என்னதான் அரசியல், சினிமா என பிசியாக இருந்தாலும் தனது உடலை இன்றுவரை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் சரத்குமார். தற்போது 66 வயதாகும் இவர் தற்போதுகூட பார்ப்பதற்கு இளம் நடிகர் போலவே உள்ளார். இந்நிலையில் பெரிய மீசை, தாடியுடன் வாட்ட சாட்டமான உடலுடன் இருக்கும் சரத்குமாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


Advertisement