அட.. நடிகர் சந்தானத்தின் மகனா இது..? எப்படி வளர்ந்துட்டார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..

நடிகர் சந்தானத்தின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி, ஹீரோ என தொடர்ந்து கலக்கிவரும் நடிகர்களில் ஒருவர் சந்தானம். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துவந்த இவர் தற்போது ஹீரோவாக வளந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் சொந்தமாக படங்களும் தயாரித்துவருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் சந்தானத்தின் மகன் பாரிஸ் ஜெயராஜ் படத்தை பார்க்க திரையரங்கம் வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.