சினிமா

அட.. நடிகர் சஞ்சீவ்வின் அண்ணன் இவர்தானா! முதன் முதலாக வெளியான இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!!

Summary:

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சீவ். அவர் அந்த தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அந்தக் காதல் ஜோடிக்கு ஐலா என்ற அழகிய மகளும் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வருகிறார் மேலும் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பர். இந்த நிலையில் சஞ்சீவ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்ணனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement