சினிமா

முதன் முறையாக அஜித் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்... யார்னு பார்த்தீர்களா... கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

Summary:

முதன் முறையாக அஜித் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்... யார்னு பார்த்தீர்களா... கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் இறுதியாக போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல் வெளியானது‌.

இந்நிலையில் தற்போது புதிய தகவலாக ஏகே 61 படத்தில் முன்னணி நடிகரான சமுத்திரக்கனி முதன் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இந்த தகவலால் படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement