சினிமா

லாக் டவுனில் எளிமையாக நடந்து முடிந்த விஜய்பட பிரபல நடிகரின் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

Summary:

Actor roshan paheer got marriage in lockdown

கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்த திரைப்படம் த்ரிஷ்யம். இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் ரோஷன் பஷீர். த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் கமல், கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரோஷன் பஷீர் நடித்திருந்தார். 

இவர் மலையாளத்தில் பிளஸ் டூ, ரெட் ஒயின், டூரிஸ்ட் ஹோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் பைரவா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது மூன்று ரசிகர்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரோஷன் பஷீர்க்கும் கேரளாவை சேர்ந்த பர்ஸானா என்ற சட்டப்படிப்பு முடித்த பெண்ணுக்கும் கடந்த 5ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது.  கொரனோ அச்சுறுத்தல் காரணமாக இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்


Advertisement