சினிமா

ரியோ வீட்டில் விசேஷமாம்! இணையத்தளத்தில் தீயாய் பரவும் அழகிய புகைப்படங்கள்!

Summary:

ரியோ ஸ்ருதி மகள் ரிதியின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி

ரியோ ஸ்ருதி மகள் ரிதியின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார். 

 அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு ரிதி என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது  அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அவரது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.


Advertisement