பிரபல தமிழ் நடிகரின் மகன் 23 வயதில் திடீர் மரணம்..! மெக்காவில் உடல் அடக்கம்..! கதறும் குடும்பத்தினர்.



actor-raj-kapoor-son-passes-away

பிரபல தமிழ் இயக்குனரும், நடிகருமான ராஜ் கபூரின் 23 வயது மகன் ஷாருக் கபூர் உடல்நல குறைவால் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, சரத்குமாரின் சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜ் கபூர். மேலும், சன் டீவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற நந்தினி தொடரையும் இயக்கியுள்ளார் ராஜ் கபூர். பல்வேறு படங்களில் வில்லனாகவும், குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளார்.

Raj kapoor

ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் மெக்காவுக்கு சென்றிருத்த நிலையில் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிர் இழந்த ஷாரூக்கின் உடலை இந்தியா எடுத்துவராமல் மெக்காவிலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஷாரூக்கின் மரணம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் ராஜ் கபூர் குடும்பத்துக்கு தங்கள் ஆறுதலை கூறிவருகின்றனர்.

Raj kapoor