சினிமா

என்ன இப்படி செஞ்சுடீங்களே!! சித்தி 2 ராதிகா வெளியிட்ட எதிர்பாராத திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர் சித்தி. அதன் இரண்டாவது பாகமான சித்தி 2 கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்லும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த சித்தி 2 தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவியுடன் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா படிப்படியாக சீரியலில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாகத் நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் தான் தற்போது மகிழ்ச்சியும், சோகமும் கலந்த மனநிலையிலேயே இருக்கிறேன். சித்தி 2 மெகா தொடரிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை சன் டிவியில் தந்திருக்கிறேன். அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்தும், உடன் நடித்தவர்களிடமிருந்தும் சோகத்துடன் விடை பெறுகிறேன்.

கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு எனது வாழ்த்துகள். எனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கும் நிபந்தனையில்லாத அன்புக்கும், விஸ்வாசத்துக்கும் நன்றி என கூறியுள்ளார்.


Advertisement