நடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு கிட்னியும் செயலிழப்பு..! சிகிச்சைக்கு பணம் இல்லாமல், 20 முறைக்கு மேல் தற்கொலைக்கு முயற்சி..!

நடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு கிட்னியும் செயலிழப்பு..! சிகிச்சைக்கு பணம் இல்லாமல், 20 முறைக்கு மேல் தற்கொலைக்கு முயற்சி..!


Actor ponnambalam talks about suicide attempt

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தான் 20 20 முறைக்கு மேல் தற்கொலை செய்துகொள்ள முயற்ச்சி செய்ததாக நடிகர் பொன்னம்பலம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கவனிக்கதக்க வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பொன்னம்பலம். 90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த இவர் அதன் பின் சரியான வாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றினார்.

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு கிட்னியும் செயழிந்தநிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,நடிகர் கமல் பொன்னம்பலத்தின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டதாகவும், நடிகர் ரஜினிகாந்த் பொன்னம்பலத்தின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

Ponnambalam

தற்போது உடல்நலம் தேறிவந்துள்ள நடிகர் பொன்னம்பலம் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: நான் நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தேன். ஆனால் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை.

இப்போது சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் 20 முறைக்கும் மேல் தற்கொலைக்கு முயன்றேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தனது சிகிச்சைக்காக முதலில் நடிகர் சரத்குமாரிடம் உதவி கேட்டதாகவும், பின்னர் சரத்குமார், கமல், ரஜினி ஆகியோர் தனக்கு உதவி செய்ததாகவும், என்னுடன் நடித்த பெரிய நடிகர்கள் எனக்கு உதவி செய்திருந்தால் து தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.