மலையாள நடிகர் நிவின் பாலியின் புதிய படம்; அட்டகாசமான பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!

மலையாள நடிகர் நிவின் பாலியின் புதிய படம்; அட்டகாசமான பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!actor-nivin-pauly-varshangalkku-shesham-movie-song-out-J932R2

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நிவின்பாலி, பிரேமம் திரைப்படத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் பெரிதும் கவனிக்கப்பட்டார். ஆனால், அவர் தமிழில் நடித்து வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை எனினும், பிரேமத்தின் மீதான தாக்கம் தற்போது வரை குறையவில்லை.

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், மேரிலேண்ட் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் வர்ஷங்களிக்கு ஷேஷம் என்ற படத்தில் தற்போது நிவின் பாலி நடித்து வருகிறார். இப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் அதிக எதிர்பார்களுடன் உருவாகி வரும் படம் ஆகும்.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பியாரா மேரா வீரா என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடல் வினீத் ஸ்ரீனிவாசன் வரிகளில், சித்தார்த் பஸ்ரூர் குரலில், அம்ரித் ராம்நாத் இசையில் உருவாகி இருக்கிறது. பாடல் தற்போது வைரலாகி வருகிறது.