சினிமா

அட பாவமே!! பிரபல நடிகர் நெல்லை சிவா திடீர் மரணம்!! மரணத்திற்கு என்ன காரணம் தெரியுமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Summary:

வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் போன்ற ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் ந

வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் போன்ற ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்டு இன்று இயற்கை எய்தினார்.

1985 ஆண்டு வெளியான ஆண் பாவம் திரைப்படம் மூலம்  சினிமாவில் அறிமுகமான நெல்லை சிவா, தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் போன்ற படங்கள் இவருக்கு பெரிய புகழை தேடி தந்தது.

குறிப்பாக கெணத்தை காணோம் காமெடியில் நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்திருந்த காட்சிகள் இன்றுவரை மிகவும் பிரபலம். இப்படி தொடர்ந்து படங்களில் கலக்கிவந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இன்று இயற்கை எய்தினார். நெல்லை சிவாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement