இந்தியா சினிமா

ஆண்டு இறுதியில் நடந்த மேலும் ஒரு சோகம்.. பிரபல தமிழ் பட வில்லன் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Summary:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் காலமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் காலமானார்.

தமிழில் குருவி, ராஜபாட்டை, லாடம், பூஜை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். தற்போது 52 வயதாகும் இவருக்கு சமீபத்தில் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை ஹைத்ராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தனது 52 வயது வயதில் நேற்று (31-12-2020) அவர் உயிரிழந்தார். இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 300 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நர்சிங் யாதவ்வின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நர்சிங் யாதவ்வின் மரணத்தை அடுத்து பல்வேறு சினிமா பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Advertisement