சினிமா

குழந்தையாக மாறிய நடிகர் நகுல்! இணையத்தளத்தில் வைரலாகும் கியூட் புகைப்படங்கள்....

Summary:

நடிகர் நகுல் அவரது குழந்தையை போலவே அவரும் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாக

நடிகர் நகுல் அவரது குழந்தையை போலவே அவரும் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்வர் நடிகர் நகுல். 

அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார் நகுல்.

இந்நிலையில் இவர் தனது நெருங்கிய தோழியும் காதலியும் ஆன ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது இந்த ஜோடிக்கு அகிரா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கொரோனா 2 வது அலை ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வுஎடுத்து வரும் நகுல் அவரது குழந்தையுடன் உள்ள விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அவரது செல்ல குழந்தை அகிராவை போலவே அவரும் ஒத்தை குடிமி போட்டு கொட்டாய் விடும் புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement