செம குயூட்.. உம்மா.. உம்மா.. நடிகர் நகுலை கடித்து கொஞ்சும் மகள் அகிரா! வைரல் வீடியோ இதோ..

செம குயூட்.. உம்மா.. உம்மா.. நடிகர் நகுலை கடித்து கொஞ்சும் மகள் அகிரா! வைரல் வீடியோ இதோ..


actor-nakkhul-baby-cute-video-S4N54Y

நடிகர் நகுல் மகள் அகிராவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர்,பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். நகுல் பிரபல முன்னணி நடிகை தேவையாணியின்  செல்ல தம்பி.

அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார் நகுல்.

 இவர் தனது நெருங்கிய தோழியும் காதலியும் ஆன ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இக்குழந்தைக்கு அகிரான என பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா காரணத்தால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் இருக்கும்  நகுல் தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அந்த வகையில்    மகள் அகிரா அப்பாவை கடித்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை அவரது மனைவி ஸ்ருதி இணையத்தளத்தில் வெளியிட்டுயுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.