பிரபல நடிகர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல நடிகர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!


Actor Mithun Chakaravarthi Admit Hospital 


தமிழில் குரு, யாகாவாராயினும் நாகாக்க உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பு பெற்றநடிகர் மிதுன் சக்கரவர்த்தி. தற்போது இவருக்கு 76 வயது ஆகிறது. 

தமிழ் மொழி மட்டுமல்லாது இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான 300 க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்து இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மிதுன், சாரதா நிதி மோசடியில் சிக்கி தனது பதவியையும் இழந்தார். 

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாகவே நோய்வாய்ப்பட்டு இருந்த மிதுன், இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.