தனது நான்காவது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்!! உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட தகவல் இதோ !!

தனது நான்காவது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்!! உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட தகவல் இதோ !!


actor-manju-vishnu-got-fourth-child

தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், திரைப்பட நடிகர் என பன்முகத்திறமை கொண்டு திகழ்பவர் மஞ்சு விஷ்ணு. இவர் நடிகர் மோகன்பாபுவின் மகன் ஆவார். விஷ்ணு தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் தமிழில் குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு கடந்த 2009 ஆம் ஆண்டு விரோனிகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமான ஒரு சில வருடங்களிலேயே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர்.அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

manju vishnu

இந்நிலையில் விரோனிகா சமீபத்தில் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று விஷ்ணுவிற்கு நான்காவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை அவரே மிகவும் மகிழ்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.