தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இந்திய திரையுலகமே அதிர்ச்சி.. இலங்கை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டாரா மம்மூட்டி?..! ரசிகர்கள் கொந்தளிப்பு..!!
மோலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் மம்மூட்டி. இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் "Gadugannava oru yathrakurippu" என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் இலங்கைக்கு சென்றபோது அவமானப்பட்டதாக இணையத்தில் ஒருசி ல வீடியோக்கள் கசிந்தது.
அந்த வீடியோவில், மம்முட்டி ஏர்போர்ட்டில் நின்றிருக்க, அவரை அழைத்துச் செல்ல வந்த நபர் தாமதமாக வந்துள்ளார். மேலும் பெயர்பலகையை தூக்கிக்கொண்டு உள்ளே செல்கிறாரே தவிர, மம்மூட்டியை கொஞ்சம் கூட கண்டுக்கவில்லை. இதனை கண்ட மம்மூட்டி "நான் தான்" என அந்த நபரை தடுத்து நிறுத்துகிறார்.
அதன்பின் ஒரு பழைய மாருதி 800 காரில் அந்த நபர் அவரை அழைத்து செல்கிறார். ஆனால் இது உண்மை கிடையாது. உண்மை என்னவென்றால் அந்த வீடியோ "Gadugannava oru yathrakurippu" படத்தின் சூட்டிங் போது அருகிலிருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவாகும். இவை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.