சினிமா

வாவ்.. நடிகர் மகேஷ்பாபுக்கு இவ்வளவு பெரிய மகளா! எவ்ளோ கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!

Summary:

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ்பாபு

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் மகேஷ்பாபு திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும்.

முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின்  மகனான மகேஷ்பாபு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படங்களில் நடித்தார். பின்னர் தனது 25 வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மகேஷ்பாபு ஏராளமான விருதுகளையும்  பெற்றுள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு நடிகை நம்ரதா ஷிரோத்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் என்ற மகனும், சிதாரா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மகேஷ் பாபுவின் மகள் சிதாரா தனது 9வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.


Advertisement