சினிமா

பிக் பாஸ் மகத்துக்கு குழந்தை பிறந்தாச்சு!! வைரலாகும் குழந்தையின் புகைப்படம் இதோ..

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் காளை, மங்காத்தா மற்றும் விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்தே மகத் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மகத், பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மகத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகத் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மகத் மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள அழகான புகைப்படத்தையும்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement