சினிமா

இஸ்ரோ விஞ்ஞானியாகப்போகும் நடிகர் மாதவன் - என்ன காரணம் தெரியுமா?

Summary:

Actor madhavan gonna act as a ISRO scientist

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மின்னலே திரைப்படம் மூலம் அணைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் மாதவன்  "இறுதிச்சுற்று" படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் "விக்ரம் வேதா" படத்தில் நடித்தார். இந்த 2 படங்களும் மாபெரும்  வெற்றியை மாதவனுக்கு தேடி தந்தது. 

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

"அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர்" போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இத்திரைப்படத்தை  இயக்க உள்ளார் என  செய்திகள் வந்துள்ளது.

யார் இந்த நம்பி ராஜன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. நம்பி ராஜன் யார் என்று தெரிந்துகொள்வோமோ?


  
இவர் தான்  கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டத்தில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 

"Ready to fire: How India and I survived the ISRO spy case" என்ற புத்தகத்தில் தனது வாழக்கை பற்றிய குறிப்பினை நாராயணன் பதிவுசெய்துள்ளார்.  இந்த புத்தகத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக இத்திரைப்படத்தின்  இயக்குனர் தெரிவித்துள்ளார். 


Advertisement