நீ ஹீரோவா?? சிரித்த நண்பர்கள்! உடனே கேப்டன் விஜயகாந்த்.. நடிகர் லிவிங்ஸ்டன் பகிர்ந்த சீக்ரெட்!!

நீ ஹீரோவா?? சிரித்த நண்பர்கள்! உடனே கேப்டன் விஜயகாந்த்.. நடிகர் லிவிங்ஸ்டன் பகிர்ந்த சீக்ரெட்!!


actor-livingstan-shares-his-hero-story

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் லிவிங்ஸ்டன். இவர்  தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

இவர் நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். நடிகர் லிவிங்ஸ்டன் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் ஹீரோவானது குறித்து கூறியுள்ளார்.

Livingstan

அவர் கூறியதாவது, நான், விஜயகாந்த் சார் மற்றும் இன்னும் மூன்று பேர் ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது நான் ஹீரோவாக ஆசைப்படுவதாக கூறினேன். அப்பொழுது அங்கிருந்த மூன்று பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே விஜயகாந்த் சார் அவர்களை முறைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என தீட்டினார். அப்பொழுது எனக்குள் நான் ஹீரோவாக வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. அதன் பிறகே கடின உழைப்பால் கடவுள் அருளால் ஹீரோவானேன் என்று கூறியுள்ளார்.