தளபதியின் மாஸ்டர் பாடலுக்கு நடிகை கீர்த்திசுரேஷின் நாய்க்குட்டி செய்யும் காரியத்தை பாருங்கள்.. வைரல் வீடியோ!

நடிகை கீர்த்திசுரேஷ் செல்ல நாய்க்குட்டியின் குயூட் டான்ஸ் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்த படத்தில் உள்ள "ஓ மேல ஒரு கண்ணு "பாடலில் இவரது நடிப்பில் மயங்காத ரசிகர்கள் இல்லை என்று கூட சொல்லலாம். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மேலும் கீர்த்திசுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.
தற்போது கொரோனா காரணத்தால் வீட்டில் இருக்கும் இவர், தனது செல்ல பிராணியான நாய்குட்டி, தளபதி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.