நடிகை கீர்த்திசுரேஷ்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்! என்ன விஷேசம் தெரியுமா! வைரல் புகைப்படம் இதோ....

நடிகை கீர்த்திசுரேஷ்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்! என்ன விஷேசம் தெரியுமா! வைரல் புகைப்படம் இதோ....


actor-keerthysuresh-latest-movie-photo

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாக இருக்கும் சாணி காயிதம் படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

 தற்போது  கீர்த்தி சுரேஷ் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த, மிஸ் இந்தியா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நாயகனாக நடிக்கும் சாணி காயிதம் படத்தில்  நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் பெண் ஒளிப்பதிவாளாரான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பின்னர் இப்படத்திற்கு பூஜை போட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உங்களின் ஆசீர்வாதத்துடன் அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறோம் என்று கூறியுள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு நடிகைகள் ராஷி கண்ணா மற்றும் சமந்தா ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.